எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழியில் மதிமுக வேட்பாளர் இரா. செந்தில் செல்வனை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் தீவிர வாக்கு சேகரிப்பு.கிராமங்களில் உற்சாக வரவேற்பு.

தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ( தனி) சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மதிமுக வேட்பாளர் இரா செந்தில் செல்வனை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பொதுமக்களிடையே ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு மங்கைமடம் திருவெண்காடு மணி கிராமம் ராதாநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மதிமுக வேட்பாளருக்கு பொதுமக்கள் பட்டாசு வெடித்து ஆரத்தி எடுத்தும் மாலை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் இருசக்கர வாகனங்களில் தொடர்ந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *