அரியலூரில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
அரியலூர், ஜூலை 21:-
அரியலூரில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் கர்நாடகவில் மேதாது அணை கட்டுவதை நிறுத்திடவும், தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
அரியலூர் பேருந்துநிலையம் அருகில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் கர்நாடகவில் மேதாதுஅணை கட்டுவதற்கு எதிர்ப்பை தெரிவித்தும், நடுவர்நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பில் கூறிய தண்ணீரை உரிய காலத்தில் திறந்துவிட கோரியும் மாவட்ட தலைவர் வெற்றிச்செல்வன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்டதுணைதலைவர் அருள்கணேசன் அனைவரையும் வரவேற்று பேசினார், கிழக்கு மாவட்டதலைவர் ஜோசப், மாவட்ட செயலாளர் கோவிந்தராசு, ஒன்றிய தலைவர்கள் அரியலூர் இளையராசா, திருமானூர் ஆனந்தகிருஷ்ணன், தா.பழுர் அறிவழகன், ஜெயங்கொண்டம் லாரன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் கதிர்.கணேசன், பிஜேபி. மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினர், மகளிரணியினர் பச்சையம்மாள், மாலதி, தீபா, மாலதி, மகேஸ்வரி, மாவட்ட இளைஞரணி ரமேஷ், பூபாலன், காரத்திக், செந்தில், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், ஒன்றிய பொறுப்பாளர்கள் பன்னீர்செல்வம், சக்திவேல், சிவஜோதி, மறவனூர் கலா, வேள்பாரிஅருள், இளையராசா, குமரேசன், மாவட்ட செய்தி தொடர்பாளர் அழகுசங்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினர், யோகாகலியமூர்த்தி நன்றி கூறினார்.
AlaguSankar