தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ளாட்சி ஊரக அமைப்புகளில் பணியாற்றும் துப்பரவு பணியாளர்களுக்கு தகுதி முகாம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய அங்கமான பணியாளர்களான உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் துப்பரவு பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான தகுதி முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா.வைத்திநாதன் தலைமையில் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப ராஜகுமார் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ் நகராட்சி ஆணையாளர்கள் போடிநாயக்கனூர் அப்துல் முஸ்தபா பெரியகுளம் தமிஹா சுல்தானா தேனி அல்லிநகரம் செல்வி எஸ்.பார்கவி சின்னமனூர் ரா.து. கோபிநாத் கம்பம் உமாசங்கர் கூடலூர் கிருஷ்ணமூர்த்தி நகராட்சி பொறியாளர் தேனி அல்லிநகரம் போடிநாயக்கனூர் குணசேகரன் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் போடிநாயக்கனூர் மக்கத்தம்மாள் சோனா சின்னமனூர் ஆண்டாள் முருகேஸ்வரி பெரியகுளம் புவனேஸ்வரி ஜெகதீசன் தேனி சரவணன் ரவிச்சந்திரன் ஆண்டிபட்டி ராகவன் சரவணன் உத்தமபாளையம் மைதிலி உள்பட மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் நகராட்சி பேரூராட்சி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.