தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல் :9715328420

மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் அவர்கள் 723 பயனாளிகளுக்கு ரூ.25.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் மற்றும் வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மனிஷ் நாரணவரே, அவர்கள் தலைமையில் இன்று (21.07.2026) திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஸ்ரீ வேலவர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 723 பயனாளிகளுக்கு ரூ.25.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் மற்றும் வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் அவர்கள் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்றைய தினம் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் மற்றும் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்ட பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, திருப்பூர் மாவட்டத்தை முன்மாதிரி மாவட்டமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உங்கள் முன்னால் உறுதியளிக்கிறேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு, மக்கள் நலன் சார்ந்த பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, மக்களின் அரசாக செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்ததைத் தொடர்ந்து, மாவட்டங்கள் தோறும் அமைச்சர்கள் மூலம் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இன்றைய தினம் திருப்பூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட 522 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், வருவாய்த்துறையின் சார்பில் கொளத்துப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 60 பயனாளிகளுக்கு ரூ.10.08 இலட்சம் மதிப்பீட்டிலும், செலாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 133 பயனாளிகளுக்கு ரூ.14.08 இலட்சம் மதிப்பீட்டிலும், கன்னிவாடி கிராமத்தைச் சேர்ந்த 08 பயனாளிகளுக்கு ரூ.1.34 இலட்சம் மதிப்பீட்டிலும் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

இதன் மூலம் மொத்தம் 723 பயனாளிகளுக்கு ரூ.25,50,622/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க. கார்த்திகேயன், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *