தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் திமுகவை தேர்தலில் புறக்கணிப்பு வழக்கறிஞர் ஈசன் முருகசாமி பேட்டி.
தாராபுரம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் மண்டபத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசான் முருகசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவிக்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திமுக 83 வாக்குறுதிகள் விவசாயிக்கு அளித்தது அதில் 10 வாக்குறுதிகளை விவசாய அல்லாதவர்களுக்கு நிறைவேற்றிவிட்டு விவசாயிகளுக்கு வாக்குறுதி அளித்தோம் என்று தெரிவித்து வருகிறார்கள் மணல் கொள்ளை காவல் மண் கடத்தல் குவாரி கற்கள் வெட்டி கடத்தல் போன்றவர்களை தடுக்க பலமுறை மனு கொடுத்தால் எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து எங்களை கைது செய்கிறார்கள் மேலும் கறிக்கோழி பிரச்சனை விவசாயிகளில் நீர் ஆதாரத்தை பலமுறை கேட்டும் அதற்கு எந்தவித அனுமதியும் வழங்காமல் காலந்தார்த்தி வந்ததால் திமுக அரசை புறக்கணிக்க விவசாயிகள் முடிவு செய்து தமிழகம் முழுவதும் கையில் எடுத்து பேட்டி அளித்து வருகிறோம் என தெரிவித்தனர்.
திமுகவுக்கு மட்டும் வாக்களிக்காமல் விவசாயிகள் அவர்களது விருப்பத்திற்கு வாக்களித்துக் கொள்ளலாம் அல்லது நோட்டாவுக்கு வாக்களிக்கலாம் என்றும் பேட்டியில் தெரிவித்தார் தாராபுரம் பகுதியில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளிடம் மிரட்டல் கொடுத்துள்ளனர்
தாராபுரம் பகுதியில் மண் கடத்தல் அதிகமாக நடைபெறுகிறது புகார் வட்டாட்சியருக்கு தெரிவித்தால் உடனே வட்டாட்சியர் சம்பந்தப்பட்ட மண் திருடும் மாபியா கும்பலுக்கு தகவல் தெரிவிக்கிறது அவர்கள் வீட்டுக்கு வந்து மிரட்டுகிறார்கள் விவசாயிகளுக்கு பட்டா தெரிவித்து இனாம் நிலங்களை அவர்களுக்கு ஒப்படைக்காமல் கோயில் நிலங்களாக மாற்றி அவர்கள் அபகரித்து வருகிறார்கள் மேலும் நல்லதங்கா அன்னிக்கி பரதமா நதியில் இருந்து நீர் தருவதாக கூறி இதுவரை அணைக்க நீர் வரவில்லை எனவே விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறோம் எனவே திமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று உறுதியாக தெரிவித்தனர் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் இதில் கலந்து கொண்டனர்.