பெரியகுளம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளருக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எம் எல் ஏ

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் சக்திவேல் என்ற ஆற்றலரசு அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பெரியகுளம் திமுக ஒன்றிய செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் மற்றும் திமுக நிர்வாகிகள் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் தேனி அல்லிநகரம் பொம்மைய கவுண்டன்பட்டி அன்னஞ்சி ஊஞ்சாம்பட்டி வடபுதுப்பட்டி உட்பட இதனைச் சுற்றி உள்ள கிராம பகுதிகளில் திமுக ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்கள் மற்றும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் செய்யப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்து கூறி இந்த அரசின் சாதனைகள் தொடர எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் சக்திவேல் என்ற ஆற்றலரசு அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தீவிர
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

உடன் பேரூராட்சி மன்ற தலைவர்கள் தாமரைக் குளம் ச. பால்பாண்டி தென்கரை வே. நாகராஜ் வடுகபட்டி சி நடேசன் உள்பட நகர ஒன்றிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *