போடிநாயக்கனூரில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் போடி சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேனி ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சதீஸ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக முன்னாள் முதல்வர், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஒ.பன்னீர்செல்வம் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்


இந்த நிகழ்ச்சியில் போடி நகர திமுக செயலாளர் ஆர் புருஷோத்தமன் தேனி ஒன்றிய செயலாளர் எஸ்பி ஐயப்பன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒ.பி ரவீந்திரநாத் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் எம் சங்கர் ராஜா ரமேஷ் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் பூதிப்புரம் பேரூராட்சி மன்ற தலைவர் பேரூர் திமுக செயலாளர் கவியரசு பால்பாண்டியன் முன்னாள் நகர் மன்ற தலைவர் வி.ஆர் பழனி ராஜ் உள்ளிட்ட நகர திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *