மத்திய அரசுக்கு கடும் கண்டனம் மேயர் ஜெகன்.


நாடாளுமன்றத்தில் தொகுதி சீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது இதனால் தமிழ்நாடு கடும் பாதிக்கப்படும் தொகுதி குறைக்கப்படும் என்ற நிலைமை உள்ளது இது தொடர்பாக தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் நேற்று மாவட்ட செயலாளர் அவர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகம் முழுவதும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி வியாழக்கிழமை காலை போல் பேட்டையில் உள்ள மாநகராட்சி மேயர் ஜெகன் வீட்டில் மாநகராட்சி மேயர் ஜெகன் வீட்டில் கருப்பு கொடி ஏற்றப்பட்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷம் போட்டனர்.

அப்போது மேயர் ஜெகன் கூறுகையில் மத்திய அரசு கடந்த ஐந்து வருட காலமாக தமிழக அரசை அனைத்து வகையிலும் வஞ்சித்து வருகிறது அது கல்வி நிதியாக இருந்தாலும் சரி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் நிதியாக இருந்தாலும் சரி மத்திய அரசு தமிழக அரசுக்கு முறையாக வழங்குவது கிடையாது

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது இதன் மூலம் தமிழகம் கடுமையாக வஞ்சிக்கப்பட உள்ளது அதன்படி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் உத்தரவின் படி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது என்று மேயர் ஜெகன் கூறினார்.

வட்டச் செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் சமூக. ஆர்வலர் ஐசக். வட்ட அவைத் தலைவர் அற்புதராஜ் மாணவர் பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பெரியசாமி. மற்றும் கணேசன். பாலசுப்பிரமணியன். மாவட்ட பிரதிநிதி நாராயணன் மற்றும் திமுகவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *