கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதியில் பர்கூர் தேர்தல் களம்: பிரதான கட்சிகளை அதிரவைக்கும் சுயேச்சை வேட்பாளர் இரா.மாதேஷ் ‘மைக்’ சின்னத்திற்கு பிரசாரம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்றத் தொகுதி எப்போதும் விஐபி தொகுதியாகவே பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவீசி வரும் வேளையில், அவர்களுக்கு இணையாக – சில இடங்களில் அவர்களை மிஞ்சும் அளவிற்கு – சுயேச்சை வேட்பாளர்கள் அளிக்கும் வாக்குறுதிகள் பொதுமக்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளன.​

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் பெரிய கட்சிகள் ஊர் ஊராகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், இதுவரை எந்தவொரு பெரிய கட்சியும் செய்யாத ஒரு முயற்சியைச் சுயேச்சை வேட்பாளர் ஈ.ரா. மாதேஷ் முன்னெடுத்துள்ளார் பர்கூர், ஜெகதேவி வேலம்பட்டி, தளிஅள்ளி, மாரிசெட்டிஹள்ளி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குத் தனது ஆதரவாளர்களுடன் இருசக்கர வாகனப் பேரணியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

பெரிய கட்சிகள் ஆடம்பர வாகனங்களில் வலம் வரும் நிலையில், எளிய முறையில் டூவீலரில் வந்து மக்களைச் சந்திப்பது தொகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.​

சுயேச்சை வேட்பாளர்களின் இந்த அதிரடி வளர்ச்சியும், அவர்களுக்குக் கிடைக்கும் மக்கள் ஆதரவும் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவினரைச் சற்று யோசிக்க வைத்துள்ளது.


​”சுயேச்சை வேட்பாளர்களின் வாக்குறுதிகளும், அவர்கள் மக்களை அணுகும் விதமும் பெரிய கட்சிகளுக்குச் சவாலாக மாறியுள்ளது. இதன் காரணமாக, செல்வாக்குள்ள சில சுயேச்சை வேட்பாளர்களைத் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியிலும் பிரதான கட்சியினர் ரகசியமாக ஈடுபட்டு வருகின்றனர்.”

​பொதுவாகப் பெரிய கட்சிகள் மட்டுமே மேடை போட்டு வாக்குறுதி அளிப்பார்கள் என்ற பிம்பத்தை உடைத்து, கிராமம் கிராமமாகச் சென்று மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து இரா. மாதேஷ் அளிக்கும் வாக்குறுதிகள் வாக்காளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.


​பர்கூர் தொகுதியில் மைக் சின்னம் எந்த அளவிற்கு ஒலிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வேட்பாளர் செல்லும் அனைத்து இடங்களிலும் மேல தாளங்கள் மற்றும் பட்டாசு வெடித்தும் நமது ஆதரவுகளை தெரிவித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *