வால்பாறையில் பணி மூப்படைந்த அரசு போக்குவரத்து கழக நடத்துனருக்கு நினைவு பரிசு வழங்கி மனமுருக வைத்த அக்கா மலை எஸ்டேட் ஒட்டுமொத்த தொழிலாளர்கள் பெருமிதம்

கோவை மாவட்டம் வால்பாறை அரசு போக்குவரத்துக் கழகத்தில் வால்பாறையிலிருந்து அக்காமலை எஸ்டேட் பகுதிக்கு தினந்தோறும் சென்று வரும் பேருந்தில் நடத்துனராக கடந்த 22 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி அப்பகுதி ஒட்டுமொத்த மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள நடத்துனர் கண்ணன் என்பவர் பணி மூப்படைந்துள்ள தகவலை அப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளார்

அதைக்கேட்ட அப்பகுதி தொழிலாளர்களும் பொதுமக்களும் பெரும் கலக்க மடைந்த நிலையில் சம்பந்தப்பட்ட நடத்துனர் கண்ணனுக்கு ஒட்டுமொத்த தொழிலாளர்களும் ஒருங்கிணைந்து மாலை, சால்வை அணிவித்து நினைவு பரிசும் வழங்கியுள்ளனர் இதை சற்றும் எதிர்பாராத அந்த நடத்துனர் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்று அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்

மனிதமும் மனிதநேயமும் நிறைந்து பொதுமக்களின் இதயங்களை கவர்ந்துள்ள இவர் போன்ற சிலர் இன்றும் இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது என்று அக்காமலை எஸ்டேட் தொழிலாளர்கள் பெருமிதத்தோடு தெரிவித்து வருகின்றனர்

வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *