காங்கேயம் செய்திகளை பிரபு
செல்:9715328420

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் காங்கேயத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம் வட்டமலை கரை அணைக்கு 15 கோடி மதிப்பீட்டில் தண்ணீர் கொண்டு வந்தோம். 6 கோடி மதிப்பிலான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க புணரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சிவன்மலைக்கு செல்ல சாலை வசதி, காங்கேயம் காளை சிலை, என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.

அந்த உரிமையில் கேட்கிறோம் உங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் அளித்து பெரிய வெற்றி பெற செய்யுங்கள். காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்கு மு.பெ.சாமிநாதன், தாராபுரம் தொகுதி இந்திராணி இருவரும் வெற்றி பெற செய்யுங்கள்.

முதல்வர் போட்ட முதல் கையெழுத்து பெண்கள் கட்டணமில்லா பேருந்து. மாணவர்களுக்கு லேப்டாப், மகளிர் உரிமை தொகை என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். இதனை நிறுத்த அதிமுக பாஜக முயற்சி செய்தது. அதனால் 5 ஆயிரம் முதல்வர் கொடுத்தார். காலை 6 மணிக்கு வங்கி கணக்கில் செலுத்தினார். பாஜக அதனை தடுத்து விடும் என வங்கி திறக்கும் முன் அதனை பெண்கள் எடுத்து விட்டனர்.

இந்த முறை 2 ஆயிரம் மகளிர் உரிமைத்தொகை, கல்வி ஊக்கத்தொகை, முதியோர் உதவித்தொகை 2000, கலைஞர் கனவு இல்லம், 8 ஆயிரம் ரூபாய் முதல்வர் ஒப்படைத்து விடுவார். என்ன வேண்டும் என மகளிர் முடிவெடுத்துக் கொள்ளுங்கள். போட்டோவை காட்டி முரட்டு அடிமையை பார்த்துள்ளீர்களா? இதற்கு தான் எடப்பாடி எனக்கு அனுபவம் இல்லை என்கிறார். ஆமாம் இந்த அனுபவம் எனக்கு இல்லை. இது உலக புகழ் பெற்ற போட்டோவாகி விட்டது.

நீங்கள் கேட்டதால் காட்டினேன் அவர் என்னை திட்டுகிறார். செத்து போ என்கிறார். இந்த தேர்தல் தமிழ்நாடு vs டெல்லி. தமிழ்நாட்டை டெல்லி தொடர்ந்து புறக்கணிக்கிறது. டி லிமிட்டேஷனில் 47 எம்.பி தான் தருவோம் என சொல்லி வருகின்றனர். டெல்லி அணியை ஓட ஓட விரட்ட வேண்டும். தலைவர் மகனாக கேட்கிறேன். கலைஞர் பேரனாக இருந்து கேட்கிறேன்.‌ என தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *