விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பெரம்பை கிராமத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. மக்கள் முதல்வர் தளபதி விஜய் அவர்களின் ஆதரவை பெற்ற வானூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் “உங்களின் ஒருவன், உங்களுக்காக ஒருவன்” என்ற வாசகத்துடன் போட்டியிடும் விஜய் ஜி.பி. சுரேஷ் (மாவட்ட கழக செயலாளர்) அவர்களுக்கு ஆதரவாக வீடு தோறும், கடை தோறும் சென்று வாக்குகள் சேகரிக்கப்பட்டன.

இந்த தேர்தல் பிரச்சார பணிகளை பெரம்பை கிளை நிர்வாகியும் வானூர் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான விஷ்ணு அவர்கள் முன்னின்று செயல்படுத்தினார். பெரம்பை, நடுப்பாளையம், வாழப்பட்டாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து, வேட்பாளருக்கு ஆதரவு கோரப்பட்டது.

இந்த நிகழ்வில் கழக தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டு தேர்தல் பணிகளை உற்சாகமாக மேற்கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *