தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சார்பாக ஒருங்கிணைந்த முதுகலை மூன்றாமாண்டு மாணவி செல்வி மு.முத்து சரஸ்வதி எழுதிய “வட்டமிடும் தூரிகை” எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா
பனுவல் அரங்கில் சிறப்பாக நடந்தது.
நிகழ்ச்சியில் தமிழ்ப் பல்கலைக்கழகம் இலக்கியத்துறையின் பேராசிரியர் (ம) தலைவர் முனைவர் ஜெ.தேவி நோக்கவுரையை ஆக்கவுரையாக வழங்கி, கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதையின் சாரத்தினையும் எடுத்துக்கூறினார்.
விழாவில் “வட்டமிடும் தூரிகை ” எனும் தலைப்பில் உருவான நூலானது சிறப்பு விருந்தினார் முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கரங்களால் வெளியிடப்பட்டு இளந்துளி பதிப்பகத்தின் நிறுவனர் க.அபினேஷ்
பெற்றுக்கொண்டார். பல்கலைக்கழக பதிவாளர் (பொ.) கோ.பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தார். இலக்கியத்துறையின் உதவிப்பேராசிரியர் முனைவர் இரா.தனலெட்சுமி பேசியதாவது ‘தஞ்சை மாநகரம் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநகரத் தலைவர் எழுத்தாளர் அகிலா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கவிஞரின் முதல் பதிப்பை தான் வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்வதாகவும், தன் மகளின் மீது அளவுகடந்த அன்பினை
வைத்திருக்கும் தாய்; தாய்மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் மகள் பற்றிய கவிதையினை வியந்து வியந்து கூறினார்.
தொடர்ந்து இளந்தமிழ் மன்றம் (ம) இளந்துளி பதிப்பகத்தின் நிறுவனர் இளந்தமிழன் க. அபினேஷ் கூறியதாவது “வரிகளுக்கும் உயிருள்ளது” என்கிற வரியினை எடுத்துக்கூறி தங்கள் பதிப்பகம் (ம) மன்றத்தின் செயல்பாடுகளை எடுத்துச்சொல்லி, கவிஞரின் கவிதை பற்றி கூறுகையில் அவர் ஒரு சிறந்த கவிஞர் என்பதைப் பதிவுசெய்தார். ஆகச்சிறந்த கவிஞர், ஆகச்சிறந்த எழுத்தாளராக, பேச்சாளராக அடையாளங் காணப்படுவார். தீ பரவட்டும் என்பதைப் போல பல புரட்சிகரமான படைப்புகளை கவிஞர் படைக்கட்டும். உங்கள் கரங்களை மட்டும் கொடுங்கள் திறமைகளை நாங்கள் என்று மாணவர்களிடையே வெளிக்கொணர்கிறோம் எழுச்சியுரையாற்றினார்.
தொடர்ந்து நூலாசிரியர் மு.முத்து சரஸ்வதி ஏற்புரையில் ‘இல்லாமை என்கிற ஒன்று தரும் வலி கவிதை வரிகளாய் வட்டமிடும் தூரிகையானது’
“கருவறை முதல் கல்லறை வரை கேள்விக குறியாய் பெண்களின் நிலை”என்று சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் ஏராளம். அதற்கான தீர்வு கிடைப்பதற்குள் அப்பெண் மரணித்தும் விடுகிறாள் என்றார்.
முன்னதாக இலக்கியத்துறையின் முதுகலை மூன்றாமாண்டு மாணவர் ச.அபிலாஷ் வரவேற்றார். நிறைவில் மாணவர் மா.மகேஷ்வரன் நன்றி கூறினார்