திருவாரூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதல் ஆண்களும் பெண்களும் முதியவர்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களிப்பு…
திருவாரூர்., ஏப்ரல்.23
திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை ஏழுமணி முதல் 17வது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7மணி முதல் ஆண்களும் பெண்களும் வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம், ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் 4,80,679 ஆண் வாக்காளர்களும் நான்கு லட்சத்தி 98 ஆயிரத்து 919 பெண் வாக்காளர்களும் 54 மூன்றாம் பாலினத்தவர்களும் மொத்தம் 979652 வாக்காளர்கள் உள்ளனர் நான்கு தொகுதிகளிலும் மொத்தம் 1271 வாக்கு சாவடிகள் உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் 54 வாக்கு சாவடிகள் பதற்றமாணவை என கண்டறியப்பட்டு அதற்கு கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நான்கு தொகுதிகளுக்கும் அரசு ஊழியர்கள் 6100 பேர் நியமிக்கப்பட்டு தேர்தல் வேலைகள் செய்து வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 1271 வாக்கு சாவடிமையங்களுக்கு 4697 இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, நேற்று இரவே தயார் நிலையில் இருந்தது.
திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் பூண்டிகலைவாணனும், அதிமுக கூட்டணி கட்சி சார்பில் பாரதியஜனதா வேட்பாளர் கோவிசந்திரசேகரன் ,நாம் தமிழர் கட்சியின் சார்பில் அஸ்வினி பூபதிபாலன் தமிழக வெற்றிகழகம் சார்பில் வீரமணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதேபோல் நன்னிலம் சட்டமன்றத் தொகுதிகளில் திமுக அதிமுக புதிய தமிழகம் மற்றும் சுயேச்சைகள் உட்பட 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியைப் பொறுத்தவரை திமுக கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாரிமுத்து, அதிமுக வேட்பாளர் பாலதண்டாயுதம் உட்பட ஒன்பது பேர் வேட்பாளராக உள்ளனர்.
மன்னார்குடி தொகுதியை பொறுத்தவரை திமுக சார்பில் டிஆர்பி.ராஜா அதிமுக கூட்டணி கட்சியான அம்மாமக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எஸ்.காமராஜ் உள்ளிட்ட 15 பேர் இறுதிப்பட்டியில் இடம்பெற்று வேட்பாளராக உள்ளனர்.
மேலும் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இன்று காலை முதல் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
மாவட்டத்தில் நான்கு தொகுதிகளுக்கும் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் கருண்கரட் தலைமையில் இரண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 9 துணை காவல்கண்காணிப்பாளர்கள், 35 ஆய்வாளர்கள், மற்றும் ஊர்க்காவல்படையினர் என 1271 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் 11 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அதிலும் காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். மாவட்டத்தில் 54பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் ராணுவபடையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் மத்திய4கம்பெனி ராணுவபடையினர் சுமார் 350 பேர் ஆயுதங்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்கு சாவடிகளிலும் நிழற்குடை, குடிநீர்வசதி கழிப்பறைவசதி முதியவர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு சாய்தள அமைப்பு கொண்ட படிக்கட்டுகள் சக்கரநாற்காலிகள், செல்போன் பாதுகாப்பாக வைப்பதற்கான இடம் என அனைத்து வசதிகளும் தேர்தல் ஆணையத்தால் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
மேலும் அனைத்து வாக்குசாவடிகளிலும் cctv பொருத்தப்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுபாடு அறையில் தீவிரமாக தேர்தல் அதிகாரிகள் மூலம்கண்காணிக்கபட்டு வருகிறது.