திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு மொத்தம் 979562 வாக்காளர்கள் உள்ள நிலையில் இவர்கள் வாக்களிக்கு ஏதுவாக 1271 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இன்று வாக்கு பதிவு நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி மிக அமைதியாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு மையங்களில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது.

சீல் வைக்கப்பட்ட இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவாரூர் திரு.வி.க அரசு கலை அறிவியல் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

அனைத்து தொகுதிகளில் இருந்தும் நள்ளிரவு வரை வாக்கு பதிவு எந்திரங்கள் வரும் நிலை உள்ளதால் நாளை 24- ந்தேதி காலை 9 மணி அளவில் வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை பூட்டி சீல் வைக்கப்படும். மேலும் இந்த மையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *