நடிகர் சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக கோவில்களில் சிறப்பு பூஜை செய்து,அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்,பெண் ஒரிவருக்கு தையல் இயந்திரம் வழங்குதல் உள்ளிட்ட நலத்தட்ட உதவிகளை வழங்கி மாபெரும் அன்னதானம் நடத்தி நடிகர் சூர்யா பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர்

தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா, இன்று ஜூலை 23ஆம் தேதி தனது 51 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இந்நிலையில் கோவையில், கோவை தெற்கு மாவட்ட சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பாக கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது..

முன்னதாக சூர்யா நற்பணி இயக்கத்தினர் இரத்த தான முகாமில் பங்கு கொண்டு இரத்த தானம் செய்தனர் தொடர்ந்து,பெண்களுக்கு இலவசமாக புடவை வழங்கப்பட்டது..

தொடர்ந்து ஏழைப்பெண் ஒருவருக்கு சுய தொழில் செய்யும் விதமாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது பின்னர் கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது..

இதில் ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்..

மாவட்ட தலைவர் சதீஸ் குமார் தலைமையில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில், செயலாளர் பகவதி பொறுப்பாளர் பூபதி பிரபு மற்றும் நிர்வாகிகள் மாசி ,சுதாகர் ,ராகுல் வினோத், லட்சுமணன், பிரகாஷ் வெள்ளளூர் பையாஷ், சந்தீப், உக்கடம் சாரதி, அசோக், லோகேஷ், பாலா ,மற்றும் மகளிர் அணி பவித்ரா ,பிருந்தா ,கார்த்திகா உட்பட பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *