சுரண்டை, ஜூலை 23: தென்காசி மாவட்டம் சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில் நகர ஊழியர் கூடுகை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகரத் தலைவர் எஸ்.கே.டி. ஜெயபால் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் ஏ.கே. சேர்ம செல்வம், எஸ்.பி. வள்ளி முருகன், எஸ். தெய்வேந்திரன், பால் (எ) சண்முகவேல் மற்றும் சகோதரி சண்முகசுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
- தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜரின் பெயர் சூட்டப்பட்டதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் தெய்வேந்திரன், எம்.ஏ. துரை, பால் (எ) சண்முகவேல், கே.ஆர்.டி. பரமசிவம், கே.டி.ஆர். மகாராஜா, நாட்டாமை கணேசன், சமுத்திரபாண்டி, ஆர். ராஜேந்திரன், ட்வின்ஸ் கோபால், ஆசாரி செல்லப்பா, டக்கர் செல்வராஜ், ஏ.எம். அருணாச்சலம், லிங்கம், அரிசி சந்திரன், டி. மாரியப்பன், சங்கர், தர்மராஜ், மாரி செல்வி, ஏ.கே.எஸ். விஜயன், டேவிட் ஜெயராஜ், கந்தையா, ஆனந்த், மகேஷ், கன்னிராஜன், தேவபாலன், சேர்மகனி, வேலம்மாள், அழகம்மாள், கீழச்சுரண்டை செல்வராஜ், செல்லத்துரை, மணிகண்டன், சாமுவேல் மற்றும் கவுன்சிலர்கள் அமுதா சந்திரன், பாலசுப்பிரமணியன், வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் செ. ஜெயச்சந்திரன் நன்றியுரை வழங்கினார்.