துறையூர் ஏப்-24
திருச்சி மாவட்டம் துறையூர்,முசிறி மண்ணச்சநல்லூர்,லால்குடி சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்கு பெட்டி இயந்திரங்கள் புலிவலம் ஓயாசிஸ் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் ஸ்ராங்ரூமில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டன.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது.இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகள்,துறையூர்,முசிறி, லால்குடி, மண்ணச்சநல்லூர் ஆகிய 4 தொகுதிகளில் பதிவான 1,153 வாக்கு பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையமான புலிவலம் ஓயாசிஸ் தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டது .
மாவட்ட ஆட்சியர், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வே.சரவணன் உத்தரவுபடி தேர்தல் பார்வையாளர் பிஜய் குமார் தாஸ்,தேர்தல் நடத்தும் அதிகாரிகள், வட்டாட்சியர்கள் தேர்தல் வட்டாட்சியர்கள் மற்றும் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் ஸ்ராங்ரூமில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.
மே மாதம் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது. அதுவரை வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழக போலீசார் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்