திருவாரூர் செய்தியாளர்,வே, செந்தில்குமார்,
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதி வாக்குப்பெட்டிகள் அனைத்தும் திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு அறையில் வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு மொத்தம் 979562 வாக்காளர்கள் உள்ள நிலையில் இவர்கள் வாக்களிக்கு ஏதுவாக 1271 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு நேற்று வாக்கு பதிவு நடைபெற்றது. வரலாறு காணாத வகையில் திருவாரூர் மாவட்டத்தில் பெருமளவு வாக்காளர்கள் வாக்கு பதிவு செய்தனர் திருவாரூர் மாவட்டம் மொத்தம் 83.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன
வாக்குப்பதிவு நிறைவு பெற்றவுடன் வாக்குப்பதிவு மையங்களில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவாரூர் திரு.வி.க அரசு கலை அறிவியல் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீலிடப்படுவது வழக்கம். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதி வாக்குப்பெட்டிகள் அனைத்தும் திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு அறையில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி. கலைவாணன் நன்னிலம் திமுக சார்பில் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் நெல்லை முபாரக் திருத்துறைப்பூண்டி சிபிஐ கட்சி சட்டமன்ற வேட்பாளர் மாரிமுத்து ஆகிய வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.