தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கார்டமம் பிளாஸ்டர்ஸ் அசோசியேஷன் கல்லூரியின் குல் புகார் குழு ஐ சி சி சார்பாக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சிங்கப் பெண் படை குடும்ப வன்முறை மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலாளர் மற்றும் தொடர்பாளர் ஆர். புருஷோத்தமன் தலைமை தாங்கினார் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ். சிவக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார் கல்லூரியின் உள் புகார் குழுவின் உறுப்பினர் முனைவர் வரலாற்றுத் துறை தலைவர் அ. ஞானசேகரன் வாழ்த்துரை வழங்கினார்
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக போடிநாயக்கனூர் சிங்கப் பெண் படை சப்.இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி பேசும்போது பெண்களுக்கு எதிராக நடக்கும் துன்புறுத்தல்களை கையாளும் சட்டங்கள் குறித்தும் குடும்ப வன்முறைகள் புகார் அளிப்பது பற்றியும் குழந்தைகள் மீதான வன்கொடுமை பற்றியும் விரிவாக விளக்கி பேசினார் இந்த நிகழ்ச்சியில் சமூக நலத்துறை கண்காணிப்பாளர் சந்திரா ஆலோசகர் தெய்வ ஜோதி உள்ளிட்ட கல்லூரி இரு பால் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர் கல்லூரியின் உள் புகார் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் நித்தியானந்த குமாரி நன்றி கூறினார்