ஜனநாயகன் பட வெளியீட்டை முன்னிட்டு கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாபு, ஆதரவற்ற முதியோருக்கு போர்வை வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்..
தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான பாபு, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீட்டை வித்தியாசமான சமூகச் சேவையின் மூலம் கொண்டாடி கவனம் ஈர்த்துள்ளார்.நீண்ட காலமாக நடிகர் விஜய்யின் ரசிகராக இருந்து, விஜய் மக்கள் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்த பாபு, தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
நடிகராக விஜய் இருந்த காலத்திலிருந்தே, அவரது ஒவ்வொரு திரைப்பட வெளியீட்டின் போதும் கொண்டாட்டங்களுடன் சேர்த்து ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதை பாபு வழக்கமாகக் கடைப்பிடித்து வந்த நிலையில்,.தற்போது தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியானதை முன்னிட்டு, தனது ஆட்டோவில் குளிரில் போர்த்திக் கொள்ளும் போர்வைகளை எடுத்துச் சென்று, கோவை நகரின் சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்ற முதியோருக்கு நேரில் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்,செந்தில், சரவணன், கரும்புகடை கலீல்,பாபு, செல்வம் கோவை சாஹத், கொங்கு பாலு பஷிர்அகமது, டென்மார்க் ரமேஸ் தளபதிசம்சுதீன், சூலூர் விக்னேஷ்,உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்..
திரைப்பட வெளியீடுகளை ஆட்டம், பாட்டம், பட்டாசு வெடிப்பு என கொண்டாடும் வழக்கத்துக்கு மாறாக, சமூக அக்கறையுடன் உதவிக்கரம் நீட்டிய பாபுவின் இந்த செயல் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
திரைப்படக் கொண்டாட்டத்தை சமூகப் பொறுப்புடன் இணைத்து, ஆதரவற்றோரின் முகத்தில் புன்னகையை வரவழைத்த பாபுவின் இந்த மனிதநேய செயல் பலருக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.