கோவையில் மாநில அளவிலான “சுகுணா டிராபி–2026” ஆண்களுக்கான ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி
தமிழகம் முழுவதும் இருந்து 35 அணிகளை சேர்ந்த 700 வீரர்கள் பங்கேற்க இருப்பதாக கோவை மாவட்ட ஹாக்கி சங்க நிர்வாகிகள் தகவல் அண்மையில் தமிழக அரசு சார்பாக கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சர்வதேச அளவிலான புதிய ஹாக்கி மைதானம் துவங்கப்பட்டது..
சுமார் 10 கோடி ரூபாய் செலவில் துவங்கப்பட்ட இதில் தேசிய சர்வதேச ஹாக்கி போட்டிகளுக்கு தமிழக வீரர், வீராங்கனைகளை தயார் படுத்தும் வகையில் தொடர்ந்து பயிற்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன..
இதன் தொடர்ச்சியாக இளையோர் ஆண்களுக்கான மாநில அளவிலான சுகுணா டிராபி ஜூனியர் ஹாக்கி போட்டி வரும் ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்கி மே 2ஆம் தேதி வரை கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கார்ப்பரேஷன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற உள்ளது இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் கோவை மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் லட்சுமி நாராயணசாமி,,மற்றும் துணை தலைவர் மெர்வின் ஜெஸ்ஸி,தமிழ்நாடு ஹாக்கி சங்க செயலாளர் செந்தில் ராஜ் குமார் ஆகியோர் பேசினர்..
ஹாக்கி இந்தியா அமைப்பின் அங்கீகாரத்துடன் நடைபெறும் இதில்,தமிழகம் முழுவதும் இருந்து 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் உள்ள 35 அணிகளை சேர்ந்த 700 வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்பதாக தெரிவித்தனர்..
குறிப்பாக இளம் வீரர்களின் திறமைகளை வெளிக்கொணரவும், அவர்களை தேசிய சர்வதேச போட்டிகளுக்கு தயார்படுத்தவும் இந்த சாம்பியன்ஷிப் முக்கிய வாய்ப்பாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தனர் லீக் மற்றும் நாக்அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டிகள்,ஹாக்கி விளையாட்டு ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தனர்..
மேலும், இந்த போட்டிகள் மூலம் தமிழ்நாட்டில் ஹாக்கி விளையாட்டின் வளர்ச்சி மேலும் வலுப்பெறும் எனவும் அமைப்பாளர்கள் தெரிவித்தனர் ஹாக்கி விளையாட்டு ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டு இளம் வீரர்களை உற்சாகப்படுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடதக்கது…