வடலூர் ஞான சபையில் சித்திரை மாத பூச ஜோதி தரிசனம்-கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பங்கேற்பு
கடலூர், மாவட்டம் வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் சித்திரை மாத பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது.
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது.
இங்கு ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தன்று ஆறு திரை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். அதே போல் சித்திரை மாத ஜோதி தரிசனம் நடந்தது. சத்திய ஞான சபையில் 7 .45 மணி முதல் 8.45 மணி வரை ஆறு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் பக்தர்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி என்று கூறிய படி பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்தனர்.
பின்னர் வள்ளலாரால் ஏற்படுத்தப்பட்ட அணையா அடுப்பில் உணவு தயார் செய்யப்பட்டு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது . இதில் கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் கலந்து ஜோதி தரிசனம் செய்தார்