மதுரை ஆரப்பாளையம் ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகாசி புனித லூர்து அன்னை ஆலய பங்குத் தந்தை ஜான் மார்ட்டின் கொடியேற்றி வைத்து சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். தொடர்ந்து 30-ந் தேதி வரை யிலும் தினமும் மாலை 6 – மணிக்கு ஜெபமாலையும், அதனைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலியும் நடைபெறுகின்றன.
பல்வேறு பங்குகளை சேர்ந்த அருட்தந்தையர்கள் பல்வேறு தலைப்புகளில் சிறப்பு திருப்பலியை நிறைவேற்றுகின்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 30-ந்தேதி மாலை சிவகங்கை மறைமாவட்டத்தை சேர்ந்த ஆயர் ஆனந்தம் திருப்பலியை நிறைவேற்றி தேர்பவனியை தொடங்கி வைக்கி றார்.
மே 1-ந் தேதி காலை 7.30 மணிக்கு குழந்தைகளுக்கு புது நன்மை வழங்கும் நிகழ்ச்சியை அருட்தந்தை ஜோசப் நிறைவேற்றி வைக் கிறார். மாலை 6 மணிக்கு சமீபத்தில் புதிய குருக்களாக திருநிலைப் படுத்தப்பட்ட டுவின் பால் லூர்தாஸ், அருண் மைக்கேல் ஆகியோர் திருவிழா நிறைவு திருப்பலி நிகழ்த்தி கொடியை இறக்கி வைத்து நிறைவு செய்கின்றனர்.
விழா ஏற்பாடுகளை பங் குத்தந்தை ஜோசப், உதவி பங்குத்தந்தை ராஜா தலைமையில் அருட்பணிப் பேரவையினர், மற்றும் அன்பியங்களை சேர்ந்தவர்கள் செய்து வருகின்றனர்.