கரூர் செய்தியாளர் மரியான் பாபு


மேம்பட்ட வலிமேலாண்மை மையம் திறப்புவிழா..

கரூரில் அமைந்துள்ள
அப்போலோ மருத்துவமனையில் கரூரில் நீண்ட நாள் மற்றும் திடீர் வலிகளை முழுமையாக கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில் மேம்பட்ட வலி மேலாண்மை மையம் (Pain Clinic )திறப்புவிழா நடைபெற்றது.

நீண்ட நாள் வலி (Chronic Pain) என்பது நோயாளிகளின் வாழ்க்கைதரத்தையும், வேலைதிறனையும், மனநலத்தையும் பாதிக்கும் ஒரு முக்கியபிரச்சினையாக இருக்கிறது.இதனை கருத்தில் கொண்டு வலியின் மூலகாரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் நோக்கில் இந்த சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தை அல்ட்ரா டெக் சிமெண்ட் லிமிட் நிறுவனத்தின் நிர்வாகத்தலைவர்
எ.அமல்ராஜ் மற்றும் அப்போலோ மருத்துவமனையின் நிர்வாகிகள், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் முன்னிலையில் திறந்துவைத்தார்.


வலி மேலாண்மை மையத்தின் முக்கிய அம்சங்கள்..
நவீன Interventional Pain Management முறைகள்,Regenerative Therapies (PRP போன்ற சிகிச்சைகள்),
ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட சிகிச்சை திட்டங்கள்,பல்துறை நிபுணர்கள் இணைந்து வழங்கும் தரமானசிகிச்சை,அறுவை சிகிச்சையல்லாத மற்றும் குறைந்த காயத்துடன் செய்யப்படும் சிகிச்சை,வலியை தற்காலிகமாக குறைப்பதற்கு பதிலாக அதன் மூலகாரணத்தைக் கண்டறிந்து வேரோடு அகற்றும் சிகிச்சை
ஆகியவை இச்சிறப்பம்சங்களில் உள்ளன.பின்னர் வலி மேலாண்மை நிபுணர்

டாக்டர்.வி.கே.சரவணன் கூறுகையில்:
“நீண்ட நாள் வலியால் அவதிப்படும் நோயாளிகள் மீண்டும் சீரான வாழ்க்கைக்கு திரும்ப உதவுவதே எங்களது நோக்கம்” என்றார். மேலும் இந்தமையத்தில் சிகிச்சை அளிக்கப்படும் முக்கிய நோய்கள் குறித்து விளக்கினார்.


சிகிச்சை அளிக்கப்படும் முக்கிய நோய்கள்:
மூட்டுவலி மற்றும் வீக்கம்,நரம்பு சார்ந்த வலி,புற்றுநோய் தொடர்பான வலி,
இடுப்பு மற்றும் கழுத்து வலி, விளையாட்டினால் ஏற்படும் காயங்கள் மற்றும் தசை-எலும்புபிரச்சனைகள் ஆகியவற்றிற்க்கு சிகிச்சை அளிக்கபடும் என கூறினார்.அதன் பின்பு அப்போலோ மருத்துவமனை தலைமை அதிகாரி டாக்டர்.கே.ஸ்ரீதர் கூறுகையில்:
“இந்த புதிய முயற்சியின் மூலம் கரூர் மக்களுக்கு உயர்தரசேவை மற்றும் நோயாளி மையப்படுத்திய சிகிச்சையை அர்ப்பணிப்பு உணர்வோடு வழங்குவதே எங்களது கடமை” என்றார்.


இந்தியாவின் முன்னணி மருத்துவ சேவை நிறுவனங்களில் ஒன்றான அப்போலோ குழுமம் உயர்தர மருத்துவ சேவை, நவீன தொழில்நுட்பம் மற்றும் நோயாளி நலனில் முன்னிலை வகித்துவருகிறது. அப்போலோ குழுமத்தின் ஒரு அங்கமாக விளங்கும் அப்போலோ மருத்துவமனை, இப்பகுதிமக்களுக்கு சிறந்த சேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மருத்துவமனையின் மருத்துவர்கள்,செவிலியர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *