தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியம் வாசிகவுண்டனூரில் திமுக விற்கு ஆதரவாக வாக்கு சேகரித்த வாசிகவுண்டனூர் கிளை துணை செயலாளர் அமுதா அவர்களை பாமகவினர்கள் தாக்கியதில் காயமடைந்து பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரைத் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் (26-4-2026) ஞாயிற்றுக்கிழமை அவரை தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர். பழனியப்பன் அவர்கள் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், ஆசிரியர் ராமகிருஷ்ணன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பூ. பழ. தனேந்திரன், முன்னாள் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பழனி, முன்னாள் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் செல்வராஜ், கதிரிபுரம் கிளை செயலாளர் முருகன் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினர்.