கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம் , தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய ஸ்ரீ செந்தூர் ஆபரண மாளிகை, வி.எல் தங்க மாளிகை லயன் சம்பத் , மோகன்ராம் நினைவாக ,சுபாஷ் ஆகியோரின் குடும்பத்தினர்
நிதி உதவியுடன் கண் சிகிச்சை முகாம் சரஸ்வதி பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
முகாமை சங்கத் தலைவர் லயன் கே எஸ் பாலசுப்ரமணியன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
வட்டார தலைவர் லயன் ..பாலகிருஷ்ணன்,செயலாளர் லயன் ராஜாராமன்,பொருளாளர் லயன். ஜோதிராம், திட்ட செயலாளர் லயன்.சங்கர் மற்றும் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு சேவை செய்தார்கள்.
அரவிந்த் கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவ நிபுணா்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்று பொது மக்களின் கண்களை பரிசோதித்தனா். நகரப்புற ,கிராமப்புற பொது மக்கள் என 284 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 176 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு மதுரை அழைத்து செல்லப்பட்டனர்.
அவா்களுக்கு உள்விழி லென்ஸ், அறுவைச் சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து பேருந்து கட்டணம் உள்ளிட்டவை இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டன.
மேலும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து 20 நபர்களுக்கு குறைந்த விலையில் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.