கல்பாக்கம் ஏப் 28
சென்னை சைதாப்பேட்டை தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகம் இதழியல் துறை புதிய ஊடகப் பள்ளி நாடகம் மற்றும் அரங்கக்கலைத் துறை சார்பாக உலக நடன தினவிழா 2026 பல்கலைக்கழக பட்டமளிப்பு அரங்கில் நடைபெற்றது.
இதில் விழாவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சி கார்த்திகேயன் வரவேற்புரை நிகழ்த்தினார். புல முதன்மையர் முனைவர் த. இரவி மாணிக்கம் மற்றும் அகில் சுற்றுலா தனியார் நிறுவன இயக்குநர் மு. அசோகன் , சிலம்ப ஆசான் முனைவர் சுதாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
இதில் பறை இசை, பரதம், சிலம்பாட்டம் , பாம்பு நடனம் உட்பட பல்வேறு குழுவினரின் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. குழு தலைவர்களாக சரண்யா சாய் பிரசாத், முனைவர் சு இந்துமதி, அருணோதய சொர்ன மேரி, சுகுணா, பிரபாகரன், செல்லாராம் கதிரவன் ஆகியோர் கலை குழுக்களுக்கு பயிற்சி அளித்து இருந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்களுக்கு அகவை முதிர்ந்த தமிழறிஞர் அகநம்பி தி.பாலசுப்பிரமணியன், முனைவர் ரவி மாணிக்கம் ஆகியோர் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினார்.