சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் தமிழ்நாடு முழுவதும் கடந்த 23ஆம் தேதி அன்று நடைபெற்றது. இந்நிலையில் மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு
526 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு அதற்கு பலத்த போலீஸ்காவல் போடப்பட்டது.


தேர்தல் நாள் அன்று மாதவரம் சுற்று வட்டாரத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் குமார் தலைமையில், மாதவரம், புழல்
ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு உதவி கமிஷனர் சிபுகுமார் ஆலோசனையில் இன்ஸ்பெக்டர்கள் உதவி இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய காவலர்கள் பணியில் ஈடுபட்டனர்.

24 மணி நேரம் தொடர்ந்து கண்காணிப்பு பணியிலும் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமலும் கொளத்தூர் மாவட்டத்தில் எந்த ஒரு புகார்களும் இல்லாமலும் சிறப்பாக பணி செய்த அத்தனை காவலர்களுக்கும் கொளத்தூர் மாவட்ட துணை ஆணையாளர் குமார் நன்றி தெரிவித்து அவர்களுக்கு தேநீர் வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *