பாலக்கோடு அருகே அரசு நகர பேருந்து மீது புளிமரம் சாய்ந்து விபத்து – அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்த்தப்பினர்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கெண்டேனஹள்ளி நெடுஞ்சாலையில் அரசு நகரப் பேருந்து மீது புளியமரம் விழுந்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்த்தபினர்.
பாலக்கோட்டிலிருந்து 22ம் எண் கொண்ட அரசு நகர பேருந்து மாரண்டஹள்ளி, சந்திராபுரம், கெண்டேனஹள்ளி, சாஸ்திரமுட்லு, அத்திமுட்லு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றது.
இன்று காலை கெண்டேனஹள்ளி நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது சாலையோரத்தில் இருந்த புளியமரம் நகர பேருந்து மீது திடீரென சாய்ந்ததால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறடித்துக் கொண்டு பேருந்து விட்டு கீழே இறங்கினர்.
அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இன்றி 20க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர்த்தப்பினர்.
இச்சம்பவம் இப்பகுதியில் திடிர் பரபரப்பை ஏற்படுத்தியது.