தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ்

செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை ஒன்றியம் முடிச்சூர் ஊராட்சி பகுதியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு முடிச்சூர் திமுக சார்பில் 1000க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு அறுசுவை உணவுகள் வழங்கும் விழா முடிச்சூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் விநாயகமூர்த்தி ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக தாம்பரம் மாநகர செயலாளர் எஸ். ஆர். ராஜா அவர்கள் கலந்து 1000க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு அறுசுவை உணவுகள் மற்றும் முதியோர் இல்லத்தில் உணவுகளை வழங்கினார்.

இந்த விழாவில் கிளை செயலாளர்கள் ரமேஷ் ,குமார் முன்னாள் ஊராட்சி தலைவர் தாமோதரன், துணை தலைவர் லோகநாதன் , துணைச் செயலாளர் வெங்கடேசன் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *