கலைஞரின் 103வது பிறந்தநாள்-திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ரா.நரேஷ் குமார் தலைமையில் மலர் தூவி மரியாதை
துறையூர் ஜீன் -04
திருச்சி மாவட்டம் துறையூரில் திருச்சி வடக்குள மாவட்ட திமுக சட்டத்துறை சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 103வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு ஜீன் மாதம் 3ஆம் தேதி காலை 11மணி அளவில் திருச்சி வடக்கு மாவட்ட திமுக சட்டத் துறை சார்பி்ல் திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ரா.நரேஷ்குமார் தலைமையில் துறையூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு திருச்சி ரோட்டில் செம்மொழி நாயகர் டாக்டர் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, கலைஞர் வாழ்க, கலைஞரின் புகழ் வாழ்க என கோஷங்கள் எழுப்பினர்.
இவ்விழாவில் கலந்து கொண்ட வழக்கறிஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் ரா.நரேஷ்குமார் தலைமையில் பேருந்து நிலையத்தில் உள்ள கலைஞர் கருணாநிதியின் முழு உருவ வெங்கல சிலைக்கு பிரமாண்ட மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் கழக வழக்கறிஞர்கள் ஏ.கே.பழனிவேல், முத்துகுமார், ராஜி,யோகராஜ், முகமது ரபீக், மதன்குமார்,குன்னுப்பட்டி செல்வராஜ்,சரண்ராஜ், பாபு,சுந்தர ஆதித்தன் ,தமிழ்செல்வன் மற்றும் வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் பார்த்திபன், ரமேஷ், நடராஜன், சரவணன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு செம்மொழி நாயகர் டாக்டர் கலைஞரின் திருவுரு படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர்