கம்பம் அருகே எம்.கே.எம் சம்மர் தொடர் பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

தேனி மாவட்டம் கம்பம் எம் கே. எம்.ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் வளாகத்தில்
நடைபெற்ற எம்.கே.எம் சம்மர் தொடர் பேட்மிண்டன் போட்டி 26 வெகு சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் U9, U11, U13, U15, U17 சிறுவர்கள் மற்றும் சிறுமியர் ஒற்றையர் பிரிவுகளில் மதுரை, திண்டுக்கல், பழனி, சிவகாசி, தேனி, கம்பம், சின்னமனூர், கன்னிவாடி, கரூர்,கோட்டயம், நெடுங்கண்டம், கட்டப்பனை, குமுளி, கம்பம் மெட்டு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து இளம் வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்றனர் இந்த
போட்டிகள் அனைத்தும் 30 பாயிண்ட் முறையில் இரண்டு நாள் நடைபெற்றது.

வெற்றி பெற்றவர்களுக்கு முதல் இடத்திற்கு ரூபாய் 3,000, இரண்டாம் இடத்திற்கு ரூ.2,000 மற்றும் அரையிறுதி வீரர்களுக்கு ரூ.1,000 பரிசுத்தொகைகள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

போட்டிகளை கே. செந்தூர் பாண்டி கே.ஆர். ஜெயபாண்டியன் மற்றும் ஜெயப்ரியா செந்தூர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இளம் பேட்மிண்டன் வீரர்கள் மிகுந்த உற்சாகம், ஆற்றல் மற்றும் விளையாட்டு மனப்பான்மையுடன் கலந்து கொண்டு பார்வையாளர்களை கவர்ந்தனர்.

எம்.கே.எம் சம்மர் சீரிஸ் பேட்மிண்டன் மாநில அளவிலான போட்டியில், 9 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் சிவகாசி ஏ.ஜெ.அகாடமியின் லோக்ஷனா சாம்பியன் பட்டத்தை வென்றார். திண்டுக்கல் வாகை ஸ்போர்ட்ஸ் அகாடமியின் அக்ஷிதா இரண்டாம் இடத்தை பெற்றார். 9 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில் திண்டுக்கல் ஸ்ட்ரிங்ஸ் அகாடமியின் ரேஷ்வந்த் கே வெற்றி பெற்றார். பழனி கே.எஸ். அகாடமியின் மித்ரன் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

11 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் மதுரை சூப்பர் ஷட்லர்ஸ் அகாடமியின் தன்வி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். திண்டுக்கல் ஸ்ட்ரிங்ஸ் அகாடமியின் தனு ஸ்ரீ இரண்டாம் இடம் பெற்றார். 11 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பழனி கே எஸ் அகாடமியின் ரிஷ்வபாலன் வெற்றி பெற்றார். திண்டுக்கல் ஸ்ட்ரிங்ஸ் அகாடமியின் தன்வித் ஆதீஷ் இரண்டாம் இடத்தை பெற்றார்.

13 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் மதுரை மேட்ச் பாயிண்ட் அகாடமியின் தமிழ் மேகா சாம்பியன் பட்டத்தை வென்றார். திண்டுக்கல் எஸ் பி சி அகாடமியின் பிரியதர்ஷினி இரண்டாம் இடம் பிடித்தார். 13 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில் திண்டுக்கல் எஸ் பி சி அகாடமியின் ஹரிகிருஷ்ணன் முதலிடம் பெற்றார். திண்டுக்கல் ஸ்ட்ரிங்ஸ் அகாடமியின் ஷ்ரவண் ஆனந்த் இரண்டாம் இடத்தை பெற்றார்.

இந்த போட்டிகளின் இரண்டாம் நாள் நடைபெற்ற 15 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் மதுரை எஸ்.ஏ.ஜ.அகாடமியின் தன்மதி சாம்பியன் பட்டத்தை வென்றார். தேனி ஸ்மைலிங் அகாடமியின் ஜெயவர்ஷினி இரண்டாம் இடம் பெற்றார். 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சின்னமனூர் அமிகோ அகாடமியின் ஷிக்கந்தர் சாஜாத் வெற்றி பெற்றார். திண்டுக்கல் அனுக்ரஹா அகாடமியின் விபீஷ் இரண்டாம் இடம் பிடித்தார்.

17 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் மதுரை எஸ் ஏ ஐ அகாடமியின் தன்மதி மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். தேனி ஸ்மைலிங் அகாடமியின் ஜெயவர்ஷினி இரண்டாம் இடம் பெற்றார். 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சின்னமனூர் அமிகோ அகாடமியின் ஷிக்கந்தர் சாஜாத் முதலிடம் பெற்றார். நெடுங்கண்டம் எச் ஏ பி ஏ அகாடமியின் கௌரிநந்தன் இரண்டாம் இடத்தை பெற்றார்.

இறுதியாக வெற்றி பெற்றோர், பயிற்சியாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *