கோவை பேரூர் போஸ்டல் காலனி பகுதியில் சேர்ந்த சரவணகுமார் மகாலட்சுமி தம்பதியினரின் மகள்கள் ஜனிக்கா ஸ்ரீ ,சுதிக்ஷா ஸ்ரீ ஆகிய இருவரும் பல்வேறு விழிப்புணர்வு பாடல்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் வேண்டாம் போதை தேவை நல்ல பாதை என்ற தலைப்பில் புதிய பாடல் ஒன்றை இயற்றியுள்ளனர் இதில் தெருக்கூத்து நடனம் போன்று வடிவமைத்து விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய பாடல்களை அவர்களைப் பாடி நடனமாடி உள்ளனர்.
நடன ஆசிரியர் சாய் புவன் நடன அமைப்பில்
போதையால் இளைஞர்கள் அவர்களது வாழ்வை வீணடிக்கின்றனர் என்பதை தெருக்கூத்து நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.