கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் வந்து செல்கின்றனர் இந்நிலையில் உளுந்தூர்பேட்டை மாவட்டம் சின்னக்குப்பம் பகுதியிலிருந்து டெம்போ வாகனத்தில் வந்த நண்பர்கள் 12 பேர்கள் கூழாங்கல் ஆற்றில் குறித்துக் கொண்டிருந்தபோது அதில் சக்திவேல் என்பவரின் மகன் விஜய் வயது 26 என்பவர் டைவ் அடித்து குளிக்கப் சென்றபோது தலையில் பலத்த காயமடைந்து சம்பவப்பகுதியிலேயே உயிரிழந்துள்ளார் தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வால்பாறை காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இசம்பவம் உடன் வந்த நண்பர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையேபெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்
23.05.2026

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *