வேப்பூர் மே 25

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள காட்டுமைலூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய நூதன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.

மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை மங்களஇசையுடன் தொடங்கி வாஸ்து பூஜை, கணபதி வழிபாடு மற்றும் முதல் கால யாக பூஜை திரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து இன்று திங்கட்கிழமை காலையில் இரண்டாம் கால யாக பூஜை, கோ பூஜை, நாடி சந்தானம், தத்வார்ச்சனை, பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.


தொடர்ந்து கோபுர கலசத்திற்கும், அதனைத் தொடர்ந்து மூலஸ்தானம் மஹா மாரியம்மனுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *