நாகப்பட்டினம்,ஜூலை.14-
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சியில் வட்டார வேளாண்மை துறையின் சார்பாக அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகள் பெருவிழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை துணை இயக்குனர் (மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்) செல்வி தலைமை தாங்கினார். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்கலா முன்னிலை வகித்தார்.
முன்னதாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் செந்தில் வரவேற்றார். இதில் சிக்கல் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் வேளாண் விஞ்ஞானிகள் கண்ணன், சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு எலினோ குறித்த விழிப்புணர்வு, பூச்சி மற்றும் நோய் பாதுகாப்பு வழிமுறைகள், பயிர் பாதுகாப்பு வழிமுறைகள், கிசான் சாரதி செயலி குறித்து விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் வைரப்பன், உதவி வேளாண் அலுவலர் பரணி மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சுதா, சதீஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.