தருமபுரி மாவட்டம் பாளையம்புதூர் அடுத்த சுப்புரு செட்டி நகர் பகுதி சேர்ந்த காலான்-புட்டியம்மாள் தம்பதிக்கு இரண்டு ஆண் மற்றும் நான்கு பெண் என ஆறு பிள்ளைகள் உள்ளனர்.
காலன் உயிரிழந்த நிலையில் புட்டியம்மாள் வீட்டில் தனிமையாக வசித்து வருகிறார். தனது கணவர் இருந்த காலத்தில் கட்டப்பட்ட வீரபத்திரன் சாமி கோயிலை பராமரித்து வருகிறார். 108 வயதான நிலையில் யாருடைய உதவியும் இல்லாமல், தனது பணிகளை தானே செய்து கொண்டு, உடல் ஆரோக்கியத்தோடு வாழ்ந்து வருகிறார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக உணவு உண்பதை நிறுத்திவிட்டு, பால், தண்ணீர் மட்டுமே உட்கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் 108 வயதான மூதாட்டி புட்டியம்மாளுக்கு இன்று மகன், மகள் மற்றும் பேரக் குழந்தைகள் ஒன்றிணைந்து வீரபத்திரன் சுவாமி கோயிலில் கனகாபிஷேகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து சந்ததியில் இருக்கும் பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் மூதாட்டி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.
தொடர்ந்து 108 வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர். மேலும் 108 ஆவது பிறந்தநாளை ஒட்டி மோதாட்டிக்கு மூக்கு குத்தி, தோடு, மூக்குத்தி, நெக்லஸ் உள்ளிட்ட தங்க ஆவணங்களை அணிவித்தும் மகிழ்ந்தனர். மேலும் 108 வயதான மூதாட்டிக்கு தனது குடும்பத்தினர் கனகாபிஷேகம் செய்து கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் நிகழ்ச்சியை ஏற்படுத்தியது.