கோவையில் நடைபெற்ற சிறப்பு யோகா மற்றும் திறன் வெளிப்பாட்டு நிகழ்ச்சியில், 8 வயது முதல் 18 வயது வரை உள்ள 21 மாணவர்கள் பல்வேறு யோகாசனங்கள் மற்றும் உடல் நெகிழ்வு திறன்களை வெளிப்படுத்தி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்.
கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள பார்க் கல்லூரி வளாகத்தில் யோகா மற்றும் சிலம்பம் செய்தபடி பன்முகத்திறன்களை வெளிப்படுத்தும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது..
இதில் யோவா யோகா அகாடமியில் பயிற்சி பெறும் எட்டு வயது முதல் 18 வயது வரையிலான மாணவர்கள் யோகாவில் பல்வேறு செயல்களை செய்து வியக்க வைத்தனர்..
முன்னதாக இந்நிகழ்ச்சியை பார்க் கல்வி குழுமங்களின் இயக்குனர் அனுஷா ரவி துவக்கி வைத்து மாணவர்களின் சாதனை திறமைகளை பாராட்டி பேசினார்..
யோவா யோகா அகாடமியின் நிறுவனர் சரவணன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற ,இந்த சாதனை நிகழ்ச்சியில் மாணவர்கள் சக்ராசனம், உஸ்த்ராசனம், அர்த்த சக்ராசனம், யோகநித்ரா, திம்பாசனம், சிர்ச பாதாசனம் உள்ளிட்ட கடினமான யோகாசனங்களை நீண்ட நேரம் செய்து அசத்தினர்.
மேலும் சிலம்பம், உடல் சமநிலை திறன், நெகிழ்வு திறன் மற்றும் வேக திறனை வெளிப்படுத்தும் பல்வேறு சாதனைகளும் இடம்பெற்றன.
சாதனை படைத்த மாணவர்களின் திறமைகள் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்ய இருப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்…
மாணவர்களின் தன்னம்பிக்கை, மன ஒருமைப்பாடு, உடல் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தை வளர்க்கும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்வை,பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள்,பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தனர்..