கோயம்புத்தூர்,
இந்தியாவின் முன்னணி FMCG நிறுவனங்களில் ஒன்றான Marico Limited, தனது பிரபலமான ‘Parachute Advanced’ பிராண்டின் கீழ் புதிய ‘Parachute Advanced Protein Shampoo’ வரிசையை அறிமுகப்படுத்தி, தலைமுடி சுத்திகரிப்பு (Hair Cleansing) சந்தையில் அதிகாரப்பூர்வமாக கால் பதித்துள்ளது.
தேங்காய் மற்றும் பல்வேறு இயற்கை மூலப்பொருட்களின் நன்மைகளால் செறிவூட்டப்பட்ட இந்த புதிய புரத ஷாம்பு வரிசை, நுகர்வோருக்கு ஆரோக்கியமான கூந்தல் பராமரிப்பு அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தலைமுடி பராமரிப்பு துறையில் Marico நிறுவனத்தின் பிராண்ட் நிலை மேலும் வலுப்பெறும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து Marico Limited நிறுவனத்தின் இந்திய முதன்மை வணிகப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் கோபால் கூறுகையில்,
“கடந்த சில ஆண்டுகளாக Marico நிறுவனம் பல்வேறு தயாரிப்பு பிரிவுகளில் விரிவடைந்து வருகிறது. அதன்படி, ‘Parachute Advanced Coconut’ பிராண்டின் கீழ் தற்போது முடி சுத்திகரிப்பு பிரிவிலும் நாங்கள் நுழைந்துள்ளோம். இயற்கை சார்ந்த தயாரிப்புகளுக்கான நுகர்வோர் விருப்பம் அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய ஷாம்பு வரிசை சந்தையில் சிறப்பான வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது,” என்றார்.
மேலும், இந்தியாவின் தனிநபர் பராமரிப்பு சந்தை தற்போது ரூ.10,000 கோடிக்கும் அதிகமான மதிப்புடன் ஆண்டுதோறும் 9 முதல் 10 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து வருவதாகவும், இந்த புதிய அறிமுகம் Marico நிறுவனத்திற்கு பெரிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Marico நிறுவனத்தின் இந்தியப் பிரிவுக்கான தலைமைச் சந்தைப்படுத்தல் அதிகாரி விக்ரம் கர்வால் கூறுகையில்,
“நுகர்வோர் தற்போது இயற்கை சார்ந்த மற்றும் நம்பகமான தனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புகளை அதிகம் விரும்புகின்றனர். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்திய நுகர்வோருக்காகவே இந்த தயாரிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி, டிஜிட்டல் தளங்கள், உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் பிராந்திய சந்தைப்படுத்தல் தளங்கள் மூலம் இந்த தயாரிப்பை பரவலாக மக்களிடம் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.
புதிய ‘Parachute Advanced Protein Shampoo’ வரிசை, கூந்தலில் ஏற்படும் புரத இழப்பைத் தடுக்க உதவுவதுடன், ‘Damage Repair’ பிரிவிலும் நிறுவனத்தின் புதிய முயற்சியாக அமைகிறது.
இந்த ஷாம்பு வரிசையில் தேங்காய் பால், கற்றாழை, ரோஸ்மேரி, நெல்லிக்காய், சீயக்காய் மற்றும் பாதாம் போன்ற இயற்கை மூலப்பொருட்கள் இடம்பெற்றுள்ளன. கூந்தல் உதிர்வை குறைத்தல், முடியின் பளபளப்பை அதிகரித்தல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்கும் வகையில் பல்வேறு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தயாரிப்புகள் ரூ.1 தொடக்க விலை கொண்ட சாச்செட் முதல் 80 மி.லி., 170 மி.லி., 340 மி.லி., 650 மி.லி., 1 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் பேக்குகள் வரை பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. பொதுவான விற்பனை நிலையங்கள், நவீன வர்த்தக மையங்கள் மற்றும் இணையவழி விற்பனை தளங்கள் மூலமாக இவை விற்பனை செய்யப்படுகின்றன.
இந்தியாவில் கூந்தல் பராமரிப்பு சந்தையில் தனது பங்கை மேலும் அதிகரிக்கும் நோக்கில் Marico நிறுவனம் இந்த புதிய தயாரிப்பு வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், ‘Parachute Advanced’ பிராண்டின் வளர்ச்சியில் இந்த ஷாம்பு வரிசை முக்கிய பங்காற்றும் என நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.