முதுகுளத்தூர் செய்தியாளர்
ஆர் செந்தில்குமார்
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டாரத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் கடுகுசந்தை கிராமத்தில் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி பயறு வகை பயிர்களில் நுண்ணுயிர் பாசனம் என்னும் தலைப்பில் நடைபெற்றது
இப்பயிற்சிக்கு அமர்லால் வேளாண்மை துனை இயக்குநர் (மாநில திட்டம்) அவர்கள் தலைமையேற்று தொழில்நுட்ப உரையாற்றுகையில் நுண்ணுயிர் பாசனம் அமைப்பதற்கு தேவையான ஆவணங்கள் மேலும் நீர் ஆதாரங்களான ஆழ்துளை கிணறு,பண்ணைக்குட்டை உள்ள சிறுகுறு விவசாயிகள் 100% மானியத்திலும் மற்ற விவசாயிகள் 75% மானியத்திலும் நுண்ணுயிர் பாசனக் கருவிகள் பெற்றுக்கொள்ளலாம் மேலும் பயறுவகைப் பயிர்களில் 40- 60% வரை தண்ணீர் சேமிப்பு,களை வளர்ச்சி குறைவு,உரங்களை நேரடியாக வழங்கலாம், மண் ஈரப்பதம் பாதுகாக்கப்படும், வறட்சி பாதிப்பு குறையும் போன்ற தகவல்களை எடுத்துக் கூறினார்
திருமதி சீதாலட்சுமி வேளாண்மை அலுவலர் உழவர் பயிற்சி நிலையம் பரமக்குடி அவர்கள் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம்,பாஸ்போபாக்டிரியா,ரைசோபியம் ஆகியவற்றின் நன்மைகள் அதனைப் பயன்படுத்தும் முறைகள் பற்றி எடுத்துக் கூறினார் திரு தவமுருகன் உதவி வேளாண்மை அலுவலர் தொழில்நுட்ப உரையாற்றுகையில் விவசாய அடையாள எண் பதிவேற்றம் பற்றி எடுத்துக் கூறினார் திரு தீபன் உதவி வேளாண்மை அலுவலர் அவர்கள் பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தை பற்றி விரிவாக கூறினார்.திரு.முத்துக்குமரவேல் வட்டார தொழில்நுட்ப உரையாற்றுகையில் அனைத்து திட்டங்கள் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினார் திரு கோகுல் வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) கலந்து கொண்டார்