கூவத்தூர் புதிய கிராமத்தில் 9 இலட்சம் செலவில் புதிய நியாய விலை கடை ; ஊராட்சி மன்ற தலைவர் கே.பி சகாதேவன் திறந்து வைத்தார்
கல்பாக்கம் மே 29
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் ஊராட்சிக்குட்பட்ட புதிய கிராமம் பழைய கிராமம் தங்காம்பேட்டை பெரும் பள்ளம் ஆலமரம் உட்பட பகுதிகளில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர் இந்த பகுதி மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை தொலைவில் உள்ள நியாய விலைக்கடைக்குச் சென்று வாங்கி வருகின்றனர்
தொலைதூரம் நடந்து சென்று பொருட்களை வாங்கி வருவதற்கு மிகவும் சிரமமாக இருப்பதால் தங்களது குடியிருப்பிலேயே புதிய நியாய விலைக்கடை திறந்து தருமாறு பொது மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் கே.பி சகாதேவனிடம் கோரிக்கை விடுத்தனர் இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் சகாதேவன் புதிய கிராமம் பகுதியில் ௹9 இலட்சம் செலவில் புதிய நியாய விலைக்கடை கட்டடத்தை திறந்து வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் துணை தலைவர் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலாளர் மற்றும் பணியாளர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர் கோரிக்கை நிறைவேறியதால் அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் கே பி சகாதேவனுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்