திருவாரூர் செய்தியாளர் V,செந்தில் குமார் 29.5.26
திருவாரூர் அருகே பூட்டி இருந்த பெட்ரோல் பங்க் உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் தங்கம் அரை கிலோ வெள்ளி 22,000 ரொக்க பணம் திருட்டு தாலுகா போலீசார் விசாரணை.
திருவாரூர் தாலுக்கா குன்னியூர் கிராமத்தில் நாகராஜன் என்பவரது மகன் சுரேஷ்குமார் திமுக ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் மற்றும் சொந்தமாக பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவரது தந்தை நாகராஜன் இறந்த பிறகு தாயார் ஜெயா மட்டும் தனியாக வீட்டில் வசித்து வருகிறார் மகன் சுரேஷ்குமார் அருகே உள்ள வீட்டில் வசித்து வருகிறார் . ஜெயா புலிவலம் கிராமத்தில் உள்ள தனது இளைய மகன் சத்யமூர்த்தி என்பவரது வீட்டிற்கு கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சென்ற நிலையில் இன்று காலை சுரேஷ்குமார் வீட்டை பார்த்தபோது வீட்டின் முன் பக்க கதவு மற்றும் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டது தெரியவந்தது உடனடியாக தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் விரைந்து வந்த போலீசார் நடத்தினர் இதனுடைய ஜெயா தனது வீட்டில் உள்ள பீரோவை சென்று பார்த்த போது தாலி சங்கிலி உள்ளிட்ட 13 பவுன் தங்க நகைகளும் அரை கிலோ வெள்ளி பொருட்களும் 22,000 ரொக்க பணமும் காணாமல் போனது தெரிய வந்தது மேலும் பட்டுப் புடவைகளும் திருட்டுப் போனது தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவம் குறித்து தாலுகா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் -திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.