நாகப்பட்டினம்,மே.29-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி பண்டார புளியங்குடியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் – சந்திரா தம்பதியின் மகன் பார்த்தசாரதி(வயது 28). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் உள்ள தனியார் கம்பெனியில் பணிக்காக சென்றுள்ளார்.
இந்த நிலையில் 2 தினங்களுக்கு முன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக உயிரிழந்த பார்த்தசாரதி நண்பர் மூலமாக மலேசியா காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் திருக்கண்ணபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில் பெற்றோர்களுக்கு தகவல் வந்துள்ளது. உடல் கூறு ஆய்வுக்குப் பிறகு உடனடியாக தாயகம் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மலேசிய அரசு குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்,
கூலி விவசாயம் செய்து குடிசை வீட்டில் வாழும் தங்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தர வேண்டுமென என பெற்றோர்கள் தமிழக முதல்வருக்கும், பாரத பிரதமருக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.