தேனி அருகே அரண்மனை புதூரில் மக்கள் நல பணியாளருக்கு பிரிவு உபசார விழா
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள தேனி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரண்மனைப் புதூர் ஊராட்சியில் மக்கள் நல பணியாளராக கடந்த 34 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வு பெற்றவருக்கு பிரிவு உபச்சார விழா ஊராட்சி அலுவலகத்தில் மக்கள் நல பணியாளர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே. திலகவதி தலைமையில் ஊராட்சி செயலர் கே. ரத வேல் முன்னிலையில் நடைபெற்றது ஓய்வு பெறும் மக்கள் நாள் பணியாளர் விஜயலட்சுமியை வாழ்த்தி கே. திலகவதி ஊராட்சி செயலர் கே ரதவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்
இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற விஜயலட்சுமிக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. மேலும் அவர் பணி காலங்களில் அவர் செய்த பணிகளைப் பற்றி பாராட்டி அவருடன் பணியாற்றிய மக்கள் நல பணியாளர்கள் பலர் பாராட்டி பேசினார்கள்.