தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரத்தில் 2.50 கிலோ கஞ்சா பறிமுதல்.!

தாராபுரத்தில் நடைபெற்ற வாகன சோதனையின் போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இரண்டரை கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் உதயசந்திரன் தலைமையில், உதவி ஆய்வாளர் லோகநாதன் உள்ளிட்ட மதுவிலக்கு போலீஸார், தாராபுரம் அருகே உள்ள தெக்கலூர் பகுதியில் திங்கள்கிழமை மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்ற வடமாநில வாலிபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த உஜய் டெகா (29) என்பதும், விற்பனை செய்வதற்காக அவர் கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து 2.50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *