தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி தாராபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தாராபுரத்தில் உள்ள வீ த லீடர்ஸ் அறக்கட்டளை, எம்.எம்.மருத்துவமனை, சூர்யா பாராமெடிக்கல் கல்லூரி, முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரி ஆகியோர்
இணைந்து நடத்திய போதையில்லா தமிழகம் என்னும் தலைப்பிலான விழிப்புணர்வுப் பேரணியை முன்னாள் ராணுவ வீரர் கேப்டன்.சுப்பிரமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தாராபுரம் ராமகிருஷ்ண நல்லம்மை பாலிடெக்னிக் அருகில் இருந்து இப் பேரணி தொடங்கி நடைபெற்றது. இதில் தனியார் கல்லூரி மாணவ-மாணவிகள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.