மன்னார்குடி., மே.30
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே இராமபுரம், சவளக்காரன், துண்டாக்கட்டளை , கூணமடை உள்ளிட்ட அப்பகுதியில் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களின் குடியிருப்புகளுக்கும் விவசாய பம்பு செட்டுகளுக்கும் மின்சாரம் வழங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள மின்கம்பிகள் இந்த சாலையின் வழியாக சென்று கொண்டிருக்கின்றன.
பிரதான சாலையில் அமைந்துள்ள மின்கம்பிகள் வயல்பகுதிகளில் அமைந்துள்ள மின் கமபிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனை அடுத்து அந்த பகுதி பொதுமக்கள் தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளை கம்பியை கட்டி தூக்கி நிறுத்தியுள்ளனர்.
இது குறித்து பல முறை மன்னார்குடியில் உள்ள மின் வாரிய செயற்பொறியாளர் உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை எடுத்து கூறியும் இது நாள் வரையிலும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியபடுத்தி வருகின்றனர்.
விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர் வயல்களில் செல்லும் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால் விவசாய பணிகளும் செய்ய முடியாத நிலை ஏற்படுமோ என்ற கவலைகள் உள்ளது மழைக்காலங்களில் மின்சாரம் தாக்கி உயிர் பலியாகும் வாய்ப்பு உள்ளது.
பொதுமக்கள் உயிர் சேதம் ஏற்படாத வகையில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பியால் மன்னார்குடி வட்ட லாரிகள் முழுவதும் இந்த பகுதியில் நிறுத்தியுள்ளோம்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை லாரி மூலம் ஏற்றி கொண்டு செல்ல முடியவில்லை லாரி மீது மின் கம்பி உரசி வருகிறது தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி கட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகோரிக்கை எழுந்து வருகிறது