மன்னார்குடி., மே 30
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கட்டக்குடியில் கபடி விளையாட்டு கழகம் சார்பில் அகில இந்திய அளவிலான ஆண்கள் கபடி போட்டி கடந்த மூன்று நாட்கள் நடைபெற்றது.
இப்போட்டியில் சென்னை வருமான வரித்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மயிலாடுதுறை, தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ், இந்திய கடற் படை அணி அரியானா, பெங்களூரு புல்ஸ், உபி யோதா, சண்டிகர், கர்நாடக ரயில்வே, தென் மத்திய ரயில்வே உட்பட நாடு முழுவதிலும் இருந்து 23 முன்னணி அணிகள் பங்கேற்று விளையாடிது.
இதில் பெங்களுர் புல்ஸ் மற்றும் இந்திய கடற் படை அணி அரியானா, அணிகளுக்கான இறுதி போட்டி இன்று இரவு நடைபெற்றது. இதனை மாவட்ட காவல்காவல் துணை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தொடங்கி வைத்தார்.
இப்போட்டியில் முதலிடம் பெற்ற இந்திய கப்பற்படை ஹரியான அணி
5 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை வென்றது.இரண்டாமிடம் பெற்ற பெங்களுர் புல்ஸ் அணிக்கு ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் கோப்பையும், மூன்றாம் இடம் பெற்ற உத்திரபிரதேசம் யோத்தா அணி, மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகளுக்கு தலா 1லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.
கபாடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தாம்பூலத்தில் வெற்றிலை பாக்கு பழங்கள் வைத்து ரொக்க பணம் வழங்கப்பட்டது.