நாகப்பட்டினம்,மே.30-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை கிராமத்தில் உள்ள வெங்கடாஜலபதிக்கு அன்னமளிப்பு விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று வெங்கடாஜலபதி சாமிக்கு அன்னமளிப்பு விழா நடந்தது.

அப்போது சாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், மாப்பொடி, சந்தனம், நெய், தேன் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து ஆயிரக்கணக்கான லட்டுகள் சாமிக்கு படையல் இடப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *